PACKING


Indian Institute of Packing - பேக்கிங்

ஏற்றுமதி வணிகத்தில் எந்த ஒரு பொருளுக்கும் தரம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அந்த பொருளுக்கான பேக்கிங்கும் மிக மிக முக்கியம்.

இன்றைய உலகில் பேக்கிங் என்பதையே நான் ஒரு கலையகத்தான் கருதுகிறேன். ஆம் ! ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிலும் சேர்க்கப்படாத ஒரு கலை, இந்த பேக்கிங் கலை.

உதாரணத்திற்கு, வெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு சாதாரண சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் சிப்ஸின் அளவோ வெறும் இருபது கிராமகத்தான் இருக்கும். ஆனால், அதன் பேக்கிங் முறையைப் பாருங்கள்.

அந்த இருபது கிராம் சிப்ஸினை அடைக்கப் பயன்படுத்தும் பாக்கெட்டில் காற்றை நிரப்பி பேக்கிங் செய்கிறார்கள். இதுதான் பேக்கிங் கலை என்பது.

நீங்கள் ஏற்றுமதி செய்ய தேர்ந்தேடுத்துள்ளது எந்த பொருளாய் இருந்தாலும் சரி, இறக்குமதியாலரை தொடர்பு கொள்வதற்கு முன் முதலில் அந்தப் பொருளைப்பற்றிய ‘அனைத்து விபரங்களையும்’ தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதில், அனைத்து விபரங்களையும் என்பது அந்த பொருளுக்கான பேக்கிங் முறையையும் சேர்த்துத்தான்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வகையான பேக்கிங் முறைகள் கடைபிடிக்கப் படுகின்றன. எவ்வளவுதான் நீங்கள் தரத்தோடு குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பினாலும், அவை சரியான முறையில் எவ்வித சேதமும் இன்றி இறக்குமதியாலரை சென்றடைய வேண்டும்.

அப்போதுதான் உங்களுக்கு குறிப்பிட்டபடி பணம் வந்து சேரும். இல்லையெனில், நீங்கள் அனுப்பிய பொருட்கள் சேதமடைந்து விட்டதாகக் கூறி இறக்குமதியாளர் ஒப்பந்தம் செய்த பணத்தை விட குறைத்துதான் கொடுப்பார்.

மேலும், நீங்கள் அனுப்பிய பொருட்கள் அதிக அளவு சேதம் அடைந்திருக்கும் பட்சத்தில் அந்தப் பொருளை அவர் நிராகரிக்கக் கூட வாய்ப்புண்டு. அவ்வாறு ஏதேனும் நிகழும் பட்சத்தில் இழப்பு என்னவோ உங்களுக்குத்தான்.

இப்போது உங்களின் நம்பிக்கை சற்று குறைந்திருப்பதை என்னால் உணர முடிகிறது. தெரிந்தும் உங்களை பயமுறுத்துவதற்காக நான் இதை சொல்லவில்லை. இதுதான் உண்மை. 

காரணம், உங்களிடம் இதை தெரியப்படுத்த வேண்டிய கடமை நமது தளத்திற்கு நிறையவே இருக்கிறது.

ஏற்றுமதி வணிகம் என்றில்லாமல் எந்த ஒரு தொழிலும் இறங்கும் முன், முதலில் அவற்றைப் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு எப்போதும் வெற்றியை தேடித்தரும்.

எனவே, மீண்டும் சொல்கிறேன்.  மற்றதைப் போலவே பேக்கிங் விஷயத்திலும் சற்றுக் கவனமாகவே இருங்கள்.

பொதுவாக நீங்கள் அனுப்பப் போகும் பொருட்களுக்கான பேக்கிங் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இறக்குமதியாலரே சொல்லி விடுவார்.

இருப்பினும் நீங்கள் எந்த முறையில் பேக்கிங் செய்யப் போகிறீர்கள் என்பதை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அப்போதுதான் உங்களது பொருளை எந்த வித சேதமுமின்றி உங்களது இறக்குமதியாலருக்கு நீங்கள் அனுப்ப முடியும். அதற்கான வழிமுறைதானே எனக்கு தெரியவில்லை என்கிறீர்களா ? கவலை வேண்டாம். 

நமக்கு உதவுவதற்காகவே நமது இந்திய அரசால் உருவாக்கப் பட்டிருக்கும் ஒரு அமைப்புதான் Indian Institute of Packaging . 



                                                 Indian Institute of Packaging - Chennai 


நீங்கள் ஏற்றுமதி செய்ய தேர்ந்தெடுத்துள்ள எந்தப் பொருளானாலும் சரி, அந்தப் பொருளை சரியான முறையில், சரியான அளவில் எப்படி பேக்கிங் செய்வது ? என்பதைப் பற்றிய அனைத்து விபரங்களையும் நீங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்,   

Joint Director & Branch Head
Plot no. 169, Industrial Estate, 
Perungudi, Chennai – 600096

Tel. : 24961077, 24961560
Direct Line: 044-42629513
Tel./ Fax : 044-24961077

website : www.iip-in.com

Download As PDF